திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் பஸ் மரம் ஒன்றுடன் மோதி விபத்தில் 20 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் பஸ் மரம் ஒன்றுடன் மோதி விபத்தில் 20 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு ஆற்றுப் பாலத்திற்கு அருகில் தனியார் பஸ் ஒன்று மரம் ஒன்றுடன் மோதி இன்று (22) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த பஸ், ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த சுமார் 20 பயணிகள் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் படுகாயமடைந்த நால்வர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிலர் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )