
மத்திய கிழக்கு பதற்றத்தை குறைக்க தூதரக முயற்சி தீவிரம்
அமெரிக்கா–ஈரான் மோதல் சூழ்நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எகிப்து மற்றும் பாகிஸ்தான் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.
அதன்படி, எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாத்தி,
பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த உரையாடலில், அமெரிக்கா–ஈரான் இடையிலான தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எகிப்து வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரு தரப்பும், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்றும்,அதன் மூலம் நிலையான போர்நிறுத்தம், பதற்றம் குறைப்பு மற்றும் தற்போதைய மோதலை முடிவுக்கு கொண்டு வரும் சூழ்நிலையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும்,
குறிப்பாக அரேபிய வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கவலைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் எகிப்து வலியுறுத்தியுள்ளது.

