1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர்

1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், நேற்று இரவு (25) விமான நிலையத்தில் நடத்திய சோதனையின்போது, ​​சந்தேகதிற்குரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் கொண்டு வந்திருந்த பயணப் பைகளில் பாடசாலை உபரிகாரணங்கள் , பல்வேறு இனிப்புகள் மற்றும் பைகள் இருந்ததாகவும் , அவற்றில் 110 கிலோகிராமுக்கும் அதிகமான ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் ஒவ்வொருவரின் பயணப் பைகளிலும் 05 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள், ஒரு அனுசரணையாளர் வழங்கிய விமான டிக்கெட்டுகளின் அடிப்படையில் 22 ஆம் தேதி இலங்கையிலிருந்து தாய்லாந்திற்குப் புறப்பட்டனர்.

அங்கு, அவர்கள் சாமானிய மக்கள் போல் வேடமிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தங்கள் கைபேசிகளில் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் ஆகும். மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர்கள் குழு கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்தேகத்திற்க நபர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இளம் சந்தேக நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது .

இந்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )