இந்தியாவில் இலங்கை மீனவர் தாக்குதல் ; நாமல் ராஜபக்ச கண்டனம்

இந்தியாவில் இலங்கை மீனவர் தாக்குதல் ; நாமல் ராஜபக்ச கண்டனம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மீனவர் ஒருவர் இந்திய சேர்ந்த சில மீனவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கவலை மற்றும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கருத்து தெரிவித்தார்.

அவர் தனது பதிவில், “எமது மீனவர்களில் ஒருவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் மிகவும் கவலைக்குரியது. இத்தகைய வன்முறைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்றும், அவர் பாதுகாப்பாகவும் விரைவாகவும் இலங்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், வட மாகாணத்தைச் சேர்ந்த இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வலுவான கடல் எல்லை கட்டுப்பாடுகள் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் என்றும், அதேவேளை தமிழ்நாட்டில், குறிப்பாக அங்குள்ள பொலிஸாரின் முன்னிலையில் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது கவலைக்குரியது என்றும் நாமல் ராஜபக்ச தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )