
சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடு
இன்று நாட்டனது சட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
வீட்டில், வீதியில், வேலை செய்யும் இடத்தில் கூட துப்பாக்கி பிரயோகம் நடத்தும் அளவுக்கு இவர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பியுள்ளனர்.
இன்று சட்டத்தின் ஆட்சி இல்லை. அதனை பேணுவதற்கான ஏற்பாடுகளும் இல்லை. பாதாள உலக நடவடிக்கை சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

