இந்திய பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியஸ்தம் வகிக்க களமிறங்கியது அமெரிக்கா

இந்திய பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியஸ்தம் வகிக்க களமிறங்கியது அமெரிக்கா

இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் கூறியிருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாக வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளில் ரூபியோ இந்த விடயம் தொடர்பில் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.

தவறான முடிவுகளைத் தவிர்ப்பதற்காக இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து நேரடி தகவல்தொடர்பை மீண்டும் நிறுவுவதற்கான வழிமுறைகளை அடையாளம் காண வேண்டும் என ரூபியோ வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடக செயதிகள் தெரிவிக்கின்றன .

ஏற்கனவே அவர் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீருடன் பேசியுள்ளதாகவும் இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் எதிர்கால மோதல்களைத் தவிர்ப்பதற்காக மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க உதவியை மார்கோ ரூபியோ வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )