இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார்

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஈரான் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில்,

“ஈரான் மக்களை பணயக் கைதிகளாக மாற்றி, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தெஹ்ரான் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை ஈரான் தலைவர் உருவாக்குகிறார். இஸ்ரேல் மீதான தாக்குதலை அலி காமெனி நிறுத்தாவிட்டால் தெஹ்ரான் பற்றி எரியும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )