
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இரு வெவ்வேறு இடங்களில் நேற்று (14) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42, 44 வயதுடைய அறலகங்வில கஜுவத்த மற்றும் சீகிரிய இலுக்வல பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை அறலகங்வில மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

