
அமெரிக்காவின் கனமழை ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (04) முதல் கனமழை பெய்தது வருவதால் அம்மாகாணத்தில் உள்ள கவ்டலெப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை, வெள்ளப்பெருக்கின்போது ஆற்றின் அருகே கோடை விடுமுறை முகாமில் பங்கேற்றிருந்த சிறுமிகள் 25 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 41 பேர் மாயமானதாக கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.
CATEGORIES World News

