
தென்கொரியாவில் கனமழை ; 17 பேர் பலி
தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
CATEGORIES World News

