பிலிப்பைன்ஸில் புயல் ; 25 பேர் பலி

பிலிப்பைன்ஸில் புயல் ; 25 பேர் பலி

பிலிப்பைன்ஸில் கொமெ என்ற புயல் தாக்கியதால் அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் அக்னோ நகர் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புயலால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )