இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை இரா.சம்பந்தன் திகழ்ந்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார்.

அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார். அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்தவொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாச்சாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு வழங்கிய அவரின் மறைவுக்காக அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற ராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்மு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )