
முன்னைய அரசாங்கத்தில் தேசியப் பாடசாலை பெயர் பலகைகளுக்கென 2.4 மில்லியனுக்கும் அதிகமான பணம்செலவு
முன்னைய அரசாங்கத்தில் 809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக பெயரிடுவதற்காக பெயர் பலகைகளுக்கு மட்டும் ரூ. 2.4 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக COPA குழு தெரிவித்துள்ளது.
இந்த 809 பாடசாலைகளும் பெயரளவில் மட்டுமே தேசியப் பாடசாலைகளாக பெயரிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கல்வி அமைச்சு சமீபத்தில் COPA குழுவின் முன் அழைக்கப்பட்டபோது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் முந்தைய அரசாங்கத்தின் தேசியப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்கும் திட்டம் மற்றும் இராஜாங்க அமைச்சினால் தொடங்கப்பட்ட 72 திட்டங்கள் குறித்து 03 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

