முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 மில்லியன் ரூபாய் செலவில் வாங்கிய சோள விதைகளை சட்ட நடைமுறைக்கு மாறாக, தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே விநியோகித்ததன் மூலம் ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )