
யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ் மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது
சடலம் ஒன்று ஷகடற்பகுதியில் மிதப்பதாக கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் ஊர்காவல்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டனர்.
ஊர்காவல்துறை பொலிஸாரின் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

