
முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் தேசிய வைத்தியசாலைக்கு வருகை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய இன்று (24) வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,
அவர் உடல் நிலையில் சற்று தேரிவருவதாகவும், சரியாக எதையும் கூறமுடியாத நிலை இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்க கூடாது. சிஸ்டம் சேன்ஜ் என்ற பெயரில் தற்போதைய அரசாங்கம் செய்திரப்பது முறையல்ல என தெரிவித்தார்.

