
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது ; இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்
” இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, மேலோட்டமாகப் பார்த்தால், அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்திருப்பது குறித்து கவலை கொள்கிறேன்.
உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவர் ஏற்கனவே சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இது அவர்களின் உள் விவகாரம் என்பதை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், பழிவாங்கும் அரசியலை இலங்கை அரசு கைவிட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களாக தேசத்திற்குச் சேவை செய்துள்ளார். அவர் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.


