
???? Breaking News : எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து ; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானம்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில்18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

