
வவுனியாவில் பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்
வவுனியாவில் சப்பரத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பரத் திருவிழா நேற்று (05) இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனமே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

