கரந்தெனிய இரட்டை கொலை ; சந்தேகநபர் கைது

கரந்தெனிய இரட்டை கொலை ; சந்தேகநபர் கைது

கரந்தெனிய கொட்டவெல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி மாலை தாய் மற்றும் மகனைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கூரிய ஆயுதத்துடன் கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (14) இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )