
மாத்தறை அன்னை தேசிய திருத்தல திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தறை மாதாவின் தேசிய திருத்தல வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமானது.
118 ஆவது தடவையாகவும் இடம்பெறும் இத்திருவிழா காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை மல்கம் இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (14) இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஆசிரை வேண்டினார்.
கத்தோலிக்கர்களும் பிற மதத்தினைச் சேர்ந்தோரும் வருடாந்தம் பக்தியுடன் கொண்டாடும் இத்திருவிழாவில், கத்தோலிக்க பேரருட்தந்தைகள், அரசியல்வாதிகள் உட்பட ஏராளமான இறைமக்கள் அன்னையின் ஆசீரை வேண்டி ஒன்றுகூடியிருந்தனர்.

