
துசித ஹல்லோலுவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநரான துசித ஹல்லோலுவ, நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

