
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தற்போதைய தியவடன நிலமேவின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தியவடன நிலமேவுக்கான தேர்தல் திகதியை பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன அறிவித்துள்ளார்.
மேலும் அவர் , ”புதிய தியவடன நிலமேவுக்கான தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய தியவடன நிலமே இந்தப் பதவிக்கு 2005 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். தியவடன நிலமே ஒருவரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.” என தெரிவித்துள்ளார்.

