போர் முடிந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன்

போர் முடிந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன்

ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனத் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவில் உக்ரேன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. ஜெலன்ஸ்கி கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

“ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன். ஏனென்றால், தேர்தல் எனது இலக்கு அல்ல. மிகவும் கடினமான காலகட்டத்தில், என் நாட்டுடன் இருக்க வேண்டும், என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )