
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகளுக்காக உடனடி தீர்வு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் விரைவாக அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் நேற்று (02) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் அதிக முரண்பாடாகக் காணப்படும் காணி உரிமைப் பிரச்சினை, காணிகளைப் பகிர்தல், சட்ட நடவடிக்கைகள் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டன.
மாவட்டத்தின் சகல காணி அறிக்கைகள் மற்றும் கோவில்களை இற்றைப்படுத்துதல், காணி வழக்குகளை விரைவு படுத்தி தீர்வை பெற்றுக் கொள்வதற்காக விசேட சட்டக் குழு ஒன்றை அமைத்தல், மக்களுக்கு நியாயமான மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விண்ணப்பிக்கும் முறைகளை வழங்குதல் மற்றும் பிரதேச செயலாளர்களின் தலையீட்டினால் பொதுமக்களின் பிரச்சினைகளை பெற்றுக்கொள்ளும் முறை ஒன்றை செயல்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் பல இதன் போது மேற்கொள்ளப்பட்டன.
இக்கலந்துரையாடல் ஊடாக, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை விரைவாக மற்றும் வெற்றிகரமாக தீர்ப்பதற்கு புதிய வழிகாட்டல்களை உருவாக்குவதாக பிரதி அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

