
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நியமனம்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (திட்டமிடல்) திருமதி ராஜினி ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் நேற்று (07) வழங்கி வைத்தார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

