ஓய்வை அறிவித்த ஜோர்டி அல்பா

ஓய்வை அறிவித்த ஜோர்டி அல்பா

ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் பருவகால முடிவில் கால்பந்தாட்டத்திலிருந்து ஸ்பெய்னினதும் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவினதும் முன்னாள் பின்களவீரரான ஜோர்டி அல்பா ஓய்வு பெறவுள்ளதாக நேற்று (07) தெரிவித்துள்ளார்.

இன்டர் மியாமியில் 2023ஆம் ஆண்டு இணைந்த 36 வயதான அல்பா, 93 போட்டிகளில் ஸ்பெய்னுக்காக விளையாடிய 2023ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

யூரோ 2012ஐ வென்ற ஸ்பெய்ன் அணியில் அல்பா இடம்பெற்றிருந்தார்.

பார்சிலோனாவில் ஆறு லா லிகஅ பட்டங்களையும், சம்பியன்ஸ் லீக்கையும், கழக உலகக் கிண்ணத்தை, ஐந்து கோப்பா டெல் ரேயையும் அல்பா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )