சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் கைது

சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் கைது

யாழ் பாசையூரில் சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கிழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது யாழ் பாசையூர் பகுதியில் சட்டவிரோதமாக   35.400 கிலோக்கிராம் கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )