
அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெலிகம பிரதேச சபைத் தலைவரின் பூதவுடல்
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் உடல் மிதிகமவில் உள்ள அவரது வீட்டிற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

