வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபர் வெலிகம பொலிஸாரால் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். 

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை அவரது அலுவலகத்தில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )