
வெலிகம பிரதேச சபையின் தலைவர் படுகொலை ; 7 பேருக்கு விளக்கமறியல்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த 22ஆம் திகதி காலை அவரது அலுவலகத்தில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

