
வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் காயம்
முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை , டீ சைட் காட்மோர் பகுதியிலேயே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இருவர், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வெளி நோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
CATEGORIES Sri Lanka

