
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் வரணி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (04) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த நபரின் உடமையில் 3 கிராம் 800 மில்லிகிராம் அளவிலான ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கொடிகாமம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

