யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

யாழ்ப்பாணப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (04) மாலை சிறப்பு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

அதில், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 24, 26, மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 30 மில்லிகிராம் கெரோயின், 1000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 05 போதை மாத்திரைகள் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )