
வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கும் போராயர் பால் ரிச்சர்ட்ஸிற்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளியுறவு விவகாரங்களுக்கான வத்திக்கான் செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட்ஸ், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.
புனித பீடத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கு, இலங்கை சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தி படுத்தினார்.

