
அதிகமான மழையால் கண்டி, நுவரேலியாவின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி, உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் , அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கண்டி, நுவரேலியா ஆகிய மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மெததும்புர, மினிபே ஆகிய பிரிவுகளுக்கும்
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்டண்டாஹின்ன, மற்றும் மத்துரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

