நீர்கொழும்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 60 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (18) மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 90 கிலோகிராம் 240 கிராம் கேரள கஞ்சாவும், 58 கிராம் 640 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )