மட்டக்களப்பில் வேன் மரத்தில் மோதி விபத்து

மட்டக்களப்பில் வேன் மரத்தில் மோதி விபத்து

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாடின்றி வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

வேன் விபத்துக்குள்ளானபோது சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த சாரதி அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்பகுதியில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் விபத்தில் குறித்த வேன் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை விபத்து ஏற்பட்ட இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )