விமான நிலையத்தில் சட்டவிரோத கடத்தல் ; இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

விமான நிலையத்தில் சட்டவிரோத கடத்தல் ; இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 23 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கொண்டு வந்த ஆறு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மென்செஸ்டர்’ (Manchester) மற்றும் ‘பிளாட்டினம்’ (Platinum) வகையைச் சேர்ந்த 84,000 சிகரெட்டுகள் அடங்கிய 420 கார்ட்டூன்களும், 25 நவீன ரக ‘அப்பிள்’ (Apple) கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )