
கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
பேருவளை – சீனக்கோட்டை பகுதியில் கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

