ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்தார்

ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்தார்

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து, ஆசி பெற்றார்.

மீரிகம மினிஒலுவ ஸ்ரீ வித்யாவாச மகா பிரிவேனாவிற்கு நேற்று (01) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.

செத் பிரித் பாராயணம் செய்த மகாநாயக்க தேரர், புத்தாண்டின் செயல்பாடுகளுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு தனது ஆசீர்வாதங்களைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )