2026 கல்வி ஆண்டு முதல் தவணை ; அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

2026 கல்வி ஆண்டு முதல் தவணை ; அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )