போதைப்பொருடன் நால்வர் கைது

போதைப்பொருடன் நால்வர் கைது

பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்கள் களனி மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 24 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் கிராண்ட்பாஸ், பெர்குசன் வீதிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 820 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )