
யாழ்ப்பாணம் ரயில் விபத்து ; காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் ரயில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன், அங்கு முன்னரே பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை பாதுகாப்பான ரயில் கடவையாக மாற்றுமாறு, அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ள போதிலும், இன்னும் அந்த கடவை பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீபன்

