
ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணியின் தலைவியாக ரோஹினி கவிரத்ன நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணியின் தலைவியாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து கையளித்தார்.
இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டாரவும் கலந்துகொண்டிருந்தார்.

