
நயினாதீவு நாகதீப விகாராதிபதியை ஜனாதிபதி சந்திப்பு
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி, நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது ஜனாதிபதி நாகதீப ரஜமகா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதியிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.
மேலும், அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தையிட்டி விகாரை தொடர்பான விடயங்களும் இந்த சந்திப்பின் போது கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்றும், விகாரைக்கு தனியான காணி இருந்த போதிலும் பொதுமக்களின் காணியில் அந்த விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும், நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறுவதாகக் கருதப்படுகிறது.

