முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜர்

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொள்ள அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )