நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்கள் மூன்றும் தரமற்றவை !

நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்கள் மூன்றும் தரமற்றவை !

தற்போது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்கள் மூன்றும் தரமற்றவை , ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு கப்பல்கள் தரமற்றதாக இருந்தால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் எனினும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களும் தரமற்ற நிலையில் இருந்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் மேலும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (2) தேசிய விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு ஆண்டிற்கு சுமார் 38 நிலக்கரி கப்பல்கள் தேவைப்படுகிறது.

கடலில் நிலவும் கடும் வானிலை காரணமாக ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அந்த 38 கப்பல்களும் இறக்கப்பட வேண்டும்.

ஆனால் இதுவரை மூன்று கப்பல்கள் மட்டுமே வந்துள்ளன

அந்த மூன்று கப்பல்களும் தரமற்றவை.

நிலக்கரியால் ஏற்பட்ட இழப்பை பொதுமக்கள் மீது சுமத்த முயற்சிக்கிறார்கள்.

தற்போதைய நிலையை பயன்படுத்தி அவசர கொள்முதல் செய்து ஊழல் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முழு இழப்பையும் மின்சார நுகர்வோர் மீது சுமத்த தயாராக இருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் அடுத்த காலாண்டில் மின்சார கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதால் இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

நிலக்கரி இறக்குமதி தாமதமானால் டீசல் மாஃபியாவிடமிருந்து மின்சாரம் வாங்க நேரிடும்.

அதன் இழப்பும் பொதுமக்கள் மீதே விழும். ‘அதிக திறமையாளர்கள்’ என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்திற்கு வந்தவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்களா?” என தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )