
நுவரெலியாவில் 235 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி : சாரதி வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி சுமார் 235 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உள்ள நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

