மொரட்டுவையில் 13 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

மொரட்டுவையில் 13 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இடம்பெற்ற ஆய்வக செயல்பாட்டின்போது, ஏதோ ஒரு ரசாயனப் பொருளை சுவாசித்ததாகக் கூறப்படும் மாணவிகள் குழு ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் 13 மாணவிகள் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையில் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையின் போது இந்த நிலை ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )